அக்கட தேசத்தில் வெளியான லவ் டுடே.. தலைகால் புரியாமல் ரசிகர் செய்த சம்பவம், ஜெர்க் ஆன இவானா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லவ் டுடே படத்தை பார்த்து மிகவும் உற்சாகமடைந்த ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த அந்த திரைப்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

கோடி கணக்கில் வசூலை வாரி குவித்து வரும் இந்த திரைப்படம் இன்று தெலுங்கில் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் எந்த அளவிற்கு இந்த திரைப்படம் வரவேற்பு பெற்றதோ அதேபோன்று தற்போது தெலுங்கு மக்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அதனால் தயாரிப்பாளர் உட்பட பட குழுவினர் அனைவரும் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Also read: 20வது நாளில் லவ் டுடே செய்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை.. ஏஜிஎஸ் நிறுவனத்தை மீண்டும் தலை நிமிர்த்தி விட்ட பிரதீப்

இப்படத்தை காண தியேட்டர்களில் இளசுகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை காண பிரதீப் உட்பட படக்குழுவினர் அனைவரும் இன்று தியேட்டருக்கு வந்திருக்கின்றனர். அப்போது இந்தப் படத்தை பார்த்து மிகவும் உற்சாகமடைந்த ரசிகர் ஒருவர் படம் முடிந்து வெளியே வந்த பிரதீப்பை தூக்கி வைத்து கொண்டாடினார்.

அது மட்டுமில்லாமல் படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று அவர் புகழ்ந்தது மட்டுமல்லாமல் பிரதீப்பை பிடித்து வைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த இவானாவை பார்த்த ரசிகர் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இவானா சற்று பயத்துடனே அவருடைய வாழ்த்தை பெற்றுக் கொண்டார்.

Also read: கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

ஏனென்றால் எங்கே அந்த ரசிகர் பிரதீப்பை தூக்கியது போன்று ஹீரோயினையும் தூக்கி சுற்றி விடுவாரோ என்ற பயம் அங்கு இருந்த அனைவருக்கும் இருந்தது. அது இவானாவின் முகத்திலும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் அவர் சத்தம் இல்லாமல் அவருடைய பாராட்டுகளை ஏற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய வெற்றியை பதித்த பிரதீப்புக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் இப்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Also read: வசூலில் சிம்பு, சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட லவ் டுடே பிரதீப்.. அடுத்த டார்கெட் லோகேஷன் கைதியாம்