அக்கான்னு கூப்பிட்டு அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. சீரியல் நடிகை பகீர் பேட்டி

சினிமா துறையில் உள்ள நடிகைகள் சமீபகாலமாக வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி வருகிறார்கள். திரைத்துறையை தாண்டி எல்லா துறைகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது சினிமாவில் உள்ள நடிகைகள் தான் என கூறப்படுகிறது.

அந்தவகையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா. நான்கு வயதில் இருந்தே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மனசே மௌனமா, கிழக்கே வரும் பாட்டு போன்ற பல படங்களில் ஷர்மிளா நடித்துள்ளார்.

சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஷர்மிளா விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதன் பிறகு தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் கிஷோர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன்பின்னர் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் சர்மிளா இவரை விட்டுப் பிரிந்த தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் ஒரு மலையாள படத்தின் ஷூட்டிங் கோழிக்கோட்டில் நடைபெற்றது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருமே இளம் வயது உடையவர்களாக இருந்தனர். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் தொடக்கத்தில் எல்லோரும் என்னை அக்கா என்றே அழைத்தனர். ஆனால் அடுத்த மூன்றே நாட்களில் உதவியாளரை அனுப்பி அட்ஜஸ்ட்மென்டுக்கு ரெடியா என கேட்டனர்.

இதற்காக 50 ஆயிரம் வரை பேரம் பேசியிருந்தனர். ஆனால் என் மகன் வயது உடையவர்கள் நீங்கள். உங்களை நான் மகன் ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன் என சொன்னபோதும் அவர்கள் வற்புறுத்தியதால் அந்த படத்தில் இருந்து விலகினேன் என பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளார். இந்தப் பேட்டியைப் பார்த்த பலரும் தற்போது அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.