அஜித்தை மந்திரிச்சி விட்ட ரஜினி.. மீண்டும் நடக்கப்போகும் சந்திப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் இருவரும் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் இருவரும் மீண்டும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதாவது அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது துணிவு மற்றும் ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஒரே இடத்தில் நடக்கிறதாம். கோகுலம் ஸ்டுடியோவில் இந்த இரு படத்தில் படப்பிடிப்பு ஒன்றாக நடந்து வருவதால் அஜித், ரஜினி சந்திக்க உள்ளனராம்.

Also Read : புதுவிதமான பிரம்மாண்டத்தில் உருவாகும் பாபா.. இந்த காட்சியல்லாம் தூக்குங்க என கட்டளையிட்ட ரஜினி

இதற்கு ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், சிலர் இந்த சந்திப்பு நடக்க வேண்டாம் என கூறி வருகிறார்கள். ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் அஜித் தனது ரசிகர்களை எளிதில் சந்திப்பார். அதுமட்டுமின்றி தனது படத்தை பிரமோஷன் செய்வார்.

மேலும் செய்தியாளர்களை அடிக்கடி கூப்பிட்டு பேட்டி கொடுத்து வந்தார். இதனால் இவருக்கு சில கெட்ட பெயர் அப்போது வந்தது. ஆனால் ரஜினியை சந்தித்த பிறகு அஜித் படத்திற்கு ப்ரமோஷன் செய்வது, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வது, பேட்டி கொடுப்பது என அனைத்தையும் தவிர்த்து விட்டார்.

Also Read : எதுவுமே வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் அஜித்.. மீடியாவை வெறுக்க கூறப்படும் 5 காரணங்கள்

ரஜினியின் அறிவுறுத்தலின் படி தான் அஜித் இவ்வாறு எல்லாவற்றிலிருந்தும் விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதில் இருந்து எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. மேலும் தனது ரசிகர் கூட்டத்தையும் கலைத்து, தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆகையால் மீண்டும் ரஜினியை அஜித் சந்தித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற பயத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஒருவேளை ரஜினி அஜித்தை அரசியலில் சேர சொல்வார் எனவும் பலர் கணிக்கின்றனர். எனவே இந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்தால் நல்லது என பலரும் கூறுகிறார்கள்.

Also Read : பதவி, பணம் வந்தாலும் மாறாத உதயநிதி.. என்னது அஜித் இவர்கிட்ட கத்துக்கணுமா? நம்புற மாதிரி இல்ல