அடையாளம் தெரியாமல் மாறிப்போன அதுல்யா.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி அதை தொடர்ந்து நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மிகவும் ஹோம்லியாக நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவர் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. மேலும் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்.

அந்த வகையில் இவர் கைவசம் தற்போது கணிசமான திரைப்படங்கள் இருக்கின்றது. அதிலும் அவர் தற்போது நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து நடித்து வரும் வட்டம் திரைப்படத்தை மிக அதிகமாக எதிர்பார்த்து வருகிறார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல இமேஜை பெற்று தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறதாம்.

இந்நிலையில் அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் அந்த போட்டோவில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார்.

athulya ravi

அவர் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டீர்களா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மூக்கு, உதடு என்று ஏதாவது ஒரு பாகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக் கொள்கின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் அந்த நடிகைகளை பிளாஸ்டிக் மூஞ்சி என்று கிண்டல் செய்து வந்தனர். தற்போது அந்த லிஸ்டில் அதுல்யாவும் சேர்ந்து விட்டாரா என்று தெரியவில்லை. அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

The post அடையாளம் தெரியாமல் மாறிப்போன அதுல்யா.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா appeared first on Cinemapettai.