அட்லாண்டிக் பெருங்கடலில் செம கெத்தாக போஸ் கொடுத்த அஜித்.. டெய்லி ட்ரெண்டிங்கில் AK

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதாவது அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பா நாட்களில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்துக்கு பைக் ரேஸ், கார் ரேஸ் மீது அதீத ஈடுபாடு உண்டு. இதனால் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்புக்கு பின்பு பைக் பயணம் மேற்கொள்வார். மேலும் அவருடைய படங்களில் கார் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் அஜித் அசால்டாக நடிப்பார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் ஏகப்பட்ட பைக் ஸ்டன்ட் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அஜித் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனது பைக்குக்கு தானே பெட்ரோல் போடும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தனர்.

இதைத்தொடர்ந்து இங்கிலீஷ் சேனலை கடப்பதற்காக அஜித் கப்பலில் இங்கிலாந்திலிருந்து பெல்ஜியம் செல்லும்போது அட்லாண்டிக் பெருங்கடலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை அஜித்தின் நண்பர் சுப்ராஜ் வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ajith

இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தற்போது அஜீத் ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அஜித் தனது எடையை வெகுவாக குறைத்துள்ளார். மேலும் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Ajith

ஐதராபாத்தில் இதற்காக பிரம்மாண்டமான செட் போட்டு முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் புனேவில் தொடங்கவுள்ளது. அந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியரும் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

The post அட்லாண்டிக் பெருங்கடலில் செம கெத்தாக போஸ் கொடுத்த அஜித்.. டெய்லி ட்ரெண்டிங்கில் AK appeared first on Cinemapettai.