அட்லிகாக விஜய் செய்த உதவி.. நடிகைக்கு அடித்த பம்பர் பிரைஸ்

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன்பிறகு தளபதியின் இயக்குனர் என்ற பெயரை வாங்கும் அளவுக்கு, தொடர்ந்து விஜய்யின் மெர்சல், பிகில், தெறி என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் அதன்பிறகு அட்லி-விஜய் இடையே நட்பு உருவானது

தற்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஹிட் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. அதற்கு காரணம் அட்லி-விஜய் நட்புக்காக தான் நடிகர் விஜய்யும் இந்த கேமியோ ரோலில் நடிக்க சம்மதித்து தகவல் வெளியானது.

தற்போது தீபிகா படுகோனே இப்படத்தின் கேமியோ ரோல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவலை ஆகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் அந்த சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம்தான் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஷாருக்கானின் மனைவி தயாரிப்பில் உருவாகும் ஜவான் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டிய நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் மகனாக ஒரு கதாபாத்திரத்திலும், கேங் ஸ்டராக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் பக்கா ஆக்ஷன் திரைப்படமான இந்தப்படத்தில் தளபதி விஜய் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அறிந்த தளபதி ரசிகர்கள் பாலிவுட்டில் விஜய் என்ட்ரி கொடுத்ததை கொண்டாடுகின்றனர்.