அந்த பொண்ணோட எனக்கு கனெக்ஷனா.? மேடையில் பயில்வனை வெளுத்து வாங்கிய K.ராஜன்

சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் சொல்லி வருகிறார். இதனால் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கி வருகின்றனர்.

ஆனால் அதற்கெல்லாம் அஞ்சான் நெஞ்சனாக பயில்வான் தொடர்ந்து இதுபோன்று பலான விஷயங்களை பேசி வருகிறார். இந்த சூழலில் ஆர் ஆர் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர், நடிகைகள் உருவாகி இருக்கும் படம் என்னை மாற்றும் காதலே. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Also Read : போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

இதில் இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ், தயாரிப்பாளர் கே ராஜன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். அப்போது பேசிய கே ராஜன், சிலர் கேவலமான விஷயங்களை செய்து வருவதாக குற்றம் சாட்டு இருந்தார். இந்த இசை விளையாட்டு விழாவில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்த நடிகை துளசியும் பங்கு பெற்றார்.

இந்நிலையில் ராஜன் நாங்கள் இருவரும் அருகில் அமர்வதை பார்த்து என்னையும், துளசியையும் சேர்த்து வைத்து சிலர் பேசுவார்கள் என்று கூறினார். எங்களுக்குள் கனெக்ஷன் இருப்பது போல் சித்தரிப்பார்கள். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த துளசி நான் போறேன் என்று சொல்லும் போது, ராஜனுடன் ஓடிவிட்ட துளசி என்று எழுதுவார்கள் என்று கூறியிருந்தார்.

Also Read : அதை செஞ்சிட்டா நான் சோலிமுடிஞ்சேன்.. ரக்ஷிதா கணவனை பிரிய பயில்வான் கூறிய காரணம்

அதாவது சில பயில்வார்கள் என மறைமுகமாக பயில்வனை தாக்கி பேசியிருந்தார். பெண்களை வைத்து கேவலமாக விமர்சனம் செய்பவர்கள் என்று பயில்வனை கே ராஜன் வெளுத்து வாங்கி இருந்தார். இப்போது கே ராஜன் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயில்வான் காதுக்கு சென்றால் கண்டிப்பாக கே ராஜனை வச்சு செய்யும் அளவிற்கு இந்நேரம் ஒரு வீடியோவை தயார் செய்து இருப்பார். ஆகையால் கூடிய விரைவில் அந்த வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் என்னென்ன பிரச்சனை இணையத்தில் வெடிக்க போகிறதோ.

Also Read : 6 மாசத்துக்கு முன்பே புட்டு புட்டு வைத்த பயில்வான்.. பிசுறு தட்டாமல் வெளிவரும் நயன்தாராவின் சீக்ரட்ஸ்