அம்மாவை போல படுத்த படுக்கையாக்கிய தம்பி.. துடிதுடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் கடன் வாங்கி செய்ததால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பெரும் சங்கடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தங்களால் குடும்பமே கஷ்டப்படுவதை நினைத்து கதிர் மற்றும் முல்லை இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவ செலவிற்கு கொடுத்த பணத்தை திரும்பி கொடுத்து விட்டு வீட்டிற்கு வருவோம் எனக் கிளம்பி விட்டனர். தம்பி வீட்டை விட்டு வெளியேறுவது தாங்கமுடியாமல் எல்லாத்துக்கும் காரணமாக இருந்த மீனாவை விறுவிறுவென ஜீவா வெளுத்து வாங்குகிறான்.

அதன்பிறகு மனவருத்தத்துடன் படுக்க சென்ற மூர்த்திக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட, உடனே குடும்பமே பதைபதைத்து மருத்துவமனைக்கு மூர்த்தியை அழைத்துச் செல்கின்றனர். இப்படித்தான் கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டபோது அதனால் மனமுடைந்த லட்சுமி அம்மா நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து அதன் பிறகு வீடு திரும்பிய லட்சுமி அம்மா திடீரென்று மரணமடைந்தார்.

இப்போது மீண்டும் கதிர் செய்த தவறால் மனமுடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதன் பிறகு மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து அதை அறிந்த கதிர்-முல்லை இருவரும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனையில் மூர்த்தியை பார்க்க வருவார்கள்.

அதன் பிறகு கதிர் முல்லை இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு கூப்பிடும் மூர்த்தியிடம் முல்லையை அனுப்பி வைத்துவிட்டு, கதிர் வெளியூருக்கு வேலை செல்ல வாய்ப்பிருக்கிறது. அங்கு சென்று பணம் சம்பாதித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 5 லட்சம் கடனை அடைத்து அனைவரின் வாயையும் அடைப்பான்.

அதோடு மட்டுமல்லாமல்  மீண்டும் தன்னுடைய மனைவிக்கு இரண்டாவது முறையாக செயற்கை முறை கருத்தரிப்பு மேற்கொள்ள கதிர், முல்லையின் ஆசையையும் நிறைவேற்றுவான். இதெல்லாம் இனி வரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனிவரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.