அருள்நிதியின் அமானுஷ்ய திரில்லர் டைரி.. சினிமாபேட்டை விமர்சனம்

வித்யாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பதே அருள்நிதியின் ஸ்டைல். அந்த லிஸ்டில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படமே டைரி.

கதை: போலீசில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்களுக்கு  பழைய கேஸை தேர்ந்தெடுத்து முடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அருள்நிதி உதகையில் 16 வருடங்களுக்கு முன் நடந்த கொலை மாற்று நகை திருட்டை பற்றிய கேஸை எடுக்கிறார்.

ஒருபுறம் அருள்நிதியின் இன்வெஸ்டிகேன், மறுபுறம் ஊட்டியில் இருந்து கோயம்பத்துர் செல்லும் கடைசி பேருந்தின் பயணம் காமிக்கப்படுகிறது. அந்த பேருந்தில் காதல் ஜோடி, திருடர்கள் க்ரூப், வக்கீல் என பல தரப்பட்ட மக்கள் பயணிக்கின்றனர். சிலர் அமானுஷ்யத்தையும் உணர்கின்றனர். ஒரு கட்டத்தில் அதே பேருந்தில் அருள்நிதி ஏறுகிறார்.

பேருந்தில் நடக்கும் விஷயங்களுக்கும் அமானுஷ்யத்திற்கும் என்ன கனெக்ஷன் என்பது  அருள்நிதுக்கும் நமக்கும் புரிய வர படம் கிளைமாக்ஸ் நோக்கி செல்கிறது. இறுதியில் இந்த கேஸுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம், அவரின் அடுத்த பிளான் என்ன என்பதெல்லாம் வேற லெவல் ட்விஸ்ட்.

சினிமாபேட்டை அலசல்: ஸ்லோ முதல் பாதி தான், எனினும் இரண்டாம் பாதியில் வேகத்தை கூட்டிவிட்டார் இயக்குனர். அருள்நிதியின் நடிப்பு படத்திற்கு ப்ளஸ். இரண்டாம் பாதியில் பேருந்து ட்விஸ்ட் புரிந்ததும் நம்மால் எளிதில் அடுத்த என்ன என்று  யூகிக்க முடிகிறது.

கிராபிக்ஸ் மற்றும் மேக்கிங்ல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இந்த டீம். இறுதியில் கிளைமாக்ஸுக்கு பின் உள்ள கனெக்ஷன், அடுத்த பார்ட்டுக்கான பில்ட் அப் செம்ம மாஸ். ஆகமொத்தத்தில் இப்படம் நல்ல திரையரங்க அனுபவமாக கட்டாயம் இருக்கும்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.75 / 5

The post அருள்நிதியின் அமானுஷ்ய திரில்லர் டைரி.. சினிமாபேட்டை விமர்சனம் appeared first on Cinemapettai.