அழகில் நடிகைகளை மிஞ்சிய கிரிக்கெட் வீராங்கனைகள்.. மாடலிங் வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு

பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் அழகை விட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் அழகு மிஞ்சும் அளவிற்கு இருக்கும். அப்படி நம் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் ஐந்து அழகு தேவதைகள் மாடலிங் செய்ய அழைத்தும் மறுத்துவிட்டனர். அப்படிப்பட்டவர்கள் யார் யார் என்ற தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பிரியா புனியா: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ப்ரியா புனியா, 2018ஆம் ஆண்டு 20 ஓவர் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு சமூக வலைதளங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடந்து வருகிறார்கள். இவரது அழகை கண்ட மாடலிங் நிறுவனங்கள் போட்டோ ஷூட்டிற்கு அழைத்தபோது மறுத்து விட்டாராம்

ஹர்லீன் டியோல் : ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் பிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் டியோல் 2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 24 வயதேயாகும் ஹர்லீன் டியோளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இவரை மாடலிங் செய்ய அழைத்தபோது,தனக்கு அதில் விருப்பமில்லை என ஒதுங்கி விட்டாராம்.

Also read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

மிதாலி ராஜ்: இவரது பெயரை தெரியாதோர் இந்தியாவில் இருக்க முடியாது. ஏனென்றால் 2004 ஆம் ஆண்டு முதல் 2022 தற்போது வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள மிதாலி ராஜ் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற மிதாலி ராஜ் பல விளம்பரங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் ஈடுபட மறுத்து விட்டார்.

தானியா பாட்யா: 2020ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தானியா பாட்யாவிற்கு 24 வயதாகும். பல தரப்பிலிருந்து இவருக்கு மாடலிங்கில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை எல்லாம் மறுத்துவிட்டார்.

Also read: சென்னை அணி கோப்பை வெல்ல கமலே காரணம்.. சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறிய தகவல்

வேதா கிருஷ்ணமூர்த்தி :தனது 18 வயதிலேயே ஒருநாள் இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி இன்றளவும் ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் இன்று வரை உள்ளன. இருப்பினும் இவர் மாடலிங் துறையில் ஈடுபடுவதற்கு மறுத்துவிட்டார்.

இப்படி பல கிரிக்கெட் வீராங்கனைகள் தங்கள் நாட்டிற்காக பல விருதுகளை வென்ற போதிலும் தங்களது அழகை பயன்படுத்தி மாடலிங் துறையில் ஈடுபடுத்தி சம்பாதிக்க விரும்பாமல் தங்களது கனவுகளை நோக்கி சென்று வருகின்றனர்.

Also read: ஜொள்ளு விடவைக்கும் 5 கிரிக்கெட் தொகுப்பாளர்கள்.. அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் மாயந்தி