ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்.. டிஆர்பிக்காக கெஞ்சும் சேனல்

தற்போது தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி நடிகராக மட்டுமே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர் அந்தஸ்தை குறுகிய காலத்திலேயே பிடித்த பெருமை இவருக்கு உண்டு. அந்த வகையில் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் முன்னேறி இருக்கிறார்.

டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவர் நேரடியாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க இருக்கிறார்.

Also read:மொத்த கதையையும் மாத்திட்டு படம் பெயிலியர் என கூவும் சிவகார்த்திகேயன்.. கடவுள் இருக்கான் குமாரு

இப்படி அவர் ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது விஜய் டிவி மட்டும்தான். ஏனென்றால் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று மக்களுக்கு அடையாளப்படுத்தியதே அந்த சேனல் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முன்னணி நடிகர் அந்தஸ்தில் இருக்கிறார். ஆனாலும் அவர் தன்னை வளர்த்து விட்டவர்களை என்றுமே மறந்ததில்லை.

Also read:பொன்னியின் செல்வன் படத்தால் பிரின்ஸ் படத்திற்கு வந்த சிக்கல்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சிவகார்த்திகேயன்

அந்த வகையில் இப்போதும் அவர் விஜய் டிவிக்காக சில விஷயங்களை செய்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய் டிவி இவரை அடுத்த சூப்பர் ஸ்டார், நம்ம வீட்டு பிள்ளை என்று புகழ் பாடி வந்தது. முன்னணி நடிகரான பிறகும் கூட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியின் டிஆர்பி தான்.

போட்டி சேனல்களால் அவ்வப்போது சரிவை சந்தித்து வரும் விஜய் டிவி சிவகார்த்திகேயனை வைத்து அதை சரிப்படுத்தி வருகிறது. அவரும் தன்னை வளர்த்து விட்ட சேனலுக்காக பாடுபட்டு வருகிறார். அந்த வகையில் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read:பொன்னியின் செல்வனால் எகிறிய மவுசு.. கலக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயிக்கப்போவது யாரு?