இணையத்தை அலங்கரிக்கும் நயன்-விக்கி திருமண புகைப்படங்கள்.. சூப்பர் ஸ்டார் முதல் கிங் கான் வரை

நயன்தாரா விக்னேஷ் சிவனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார். சமீப காலமாக நயன்தாரா தாலியோடு இருக்கும் புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

நயன்தாரா திருமணத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டன. அதாவது நயன்தாராவின் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி இருந்தது. அதன் காரணமாகவே பிரபலங்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது கைபேசியில் உள்ள அனுமதி கிடையாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

vignesh shivan nayanthara

நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தனது காதலனுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் கூட வெளியாகின. ஆனால் நயன்தாரா பல படங்களில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதால் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

vignesh shivan

vignesh shivan

நயன்தாரா திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிக்க மாட்டார்கள் என செய்திகள் வெளியாகின. மேலும் கவர்ச்சி கதாபாத்திரங்களை இனி துளியும் நடிக்க மாட்டார் எனவும் கூறப்பட்டது. தற்போது நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara

nayanthara

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த், மணிரத்தினம் மற்றும் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் நயன்தாரா திருமணத்திற்கு கூலிங் கிளாஸ் போட்டுக் அட்லி கலந்துகொண்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

vignesh shivan nayanthara

vignesh shivan nayanthara