இதுக்கு ஏன் நான் நடிக்கணும்.. வாய்ப்பில்லாத ஹீரோவுக்கு ஆப்பு வைத்த யோகிபாபு

யோகி பாபு தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் இவர் இல்லாமல் எந்த திரைப்படங்களும் வெளிவருவதில்லை. அந்த அளவுக்கு இவருடைய மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது.

காமெடியனாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் இவர் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதை நன்றாக தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்களும் இவரை முன்னிலைப்படுத்தி படத்திற்கு ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. யோகி பாபு நடிகர் நிதின் சத்யாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கில் நடிகர் நிதின் சத்யாவும் ஒருவர். சென்னை 28 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவரை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தது வெங்கட் பிரபு என்று கூட சொல்லலாம்.

சில திரைப்படங்களில் கேரக்டர் ரோல் செய்து கொண்டிருந்த நிதின் சத்யா தற்போது தாதா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் யோகி பாபு ஹீரோவுக்கு நண்பராக நடித்து வருகிறார். ஆனால் படத்தின் போஸ்டர்களில் யோகி பாபுவின் போட்டோ தான் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளதாம்.

ஏனென்றால் யோகி பாபுவை வைத்து ப்ரமோஷன் செய்தால் எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் தற்போது சினிமா துறையில் இருந்து வருகிறது. அதைத்தான் தற்போது இந்த பட குழுவினரும் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் யோகி பாபுவை வைத்து தான் படத்திற்கான ப்ரமோஷனையும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதைப் பார்த்த ஹீரோ தற்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் அவரை வைத்து ப்ரோமோஷன் செய்வதற்கு நான் ஏன் இந்த படத்தில் நடிக்கணும் என்றும், என்னை டம்மியாக்கி விட்டார்கள் என்றும் அவர் தன் நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.