இந்தியால டாப் நடிகர் என்றால் அது கமல் மட்டும் தான்.. தைரியமாக புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகர். எவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தாலும் இந்திய அளவில் சிறந்த நடிகர் புகழ்பெற்ற நடிகர் என்றால் அது கமல் மட்டும் தான்.

இந்திய சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்தியாவிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி அதிக விருதுகளை வாங்கிய ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளவர். இதன் காரணமாக கமல்ஹாசன் தமிழ் ரசிகர்களையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர்.

இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு சென்று அந்தத்த மாநில மொழிகளில் பேசி தனது திறமையை வெளிப்படுத்துபவர். இதன் காரணமாக கமலஹாசன் பல பாலிவுட் நடிகர்களுக்கு பிடித்த நடிகராக வலம் வருவார். தமிழில் தான் தயாரித்து, இயக்கி, நடித்த ஹேராம் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நடிக்க வைத்தார் கமல்ஹாசன்.

Also Read : பிக்பாஸில் இருந்து விலகும் கமல்.. மொத்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய அதிர்ச்சி சம்பவம்

இதனிடையே கமல்ஹாசனை எப்போதும் பாலிவுட் நடிகர்கள் அவரை பெரிதாக மதிப்பார்கள். சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துக் கொண்டார். அந்த பேட்டியில் கமல்ஹாசனை தனது வாயில் வந்த அனைத்து வார்த்தைகளையும் வைத்து புகழ்ந்துள்ளார் என்று தான் சொல்லியாக வேண்டும்.

அதில் கமலஹாசனால் மட்டுமே இந்தியாவிலேயே கமர்ஷியல் திரைப்படங்களிலும், ஆக்ஷன் திரைப்படங்களிலும் ஒன்றாக நடித்து ஹிட் கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் கமலஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் அவரால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும். மேலும் வேறு யாராலும் அவரைப்போன்று நடிப்பது என்பது முடியாத விஷயம் என அபிஷேக் பச்சன் புகழாரம் சூட்டினார்.

Also Read : எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா

பொதுவாக பாலிவுட் நடிகர்கள் அவ்வளவு எளிதாக தென்னிந்திய நடிகர்களை பற்றி பேசமாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினால் அங்கிருக்கும் ரசிகர்கள் இவர்களை சர்ச்சைக்குரிய விதத்தில் சித்தரித்து விடுவார்கள். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் நடிகர் அபிஷேக்பச்சன் கமலஹாசனை இந்திய சினிமாவிலேயே இவரைப் போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது என புகழ்ந்து பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த புகழ் ஒருவேளை கமல்ஹாசனின் தயாரிப்பில், அபிஷேக் பச்சன் தமிழில் என்ட்ரி கொடுக்க விரும்புகிறாரோ என்ற ஒரு கோணத்திலும் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ உலக நாயகனை பற்றி மற்ற மொழி நடிகர்கள் புகழும்போது நமக்கெல்லாம் பெருமையாகத்தான் உள்ளது. தற்போது அபிஷேக் பச்சன் நடிப்பில் தஸ்வி என்ற பாலிவுட் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்