இந்திய சினிமாவை மிரட்டி விட்ட பொன்னியின் செல்வன் டீசர்.. 1000 கோடி வசூல் கன்ஃபார்ம்

மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். மிக அதிக பட்ஜெட்டில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி விக்ரம் ஆதித்யா கரிகாலனாகவும், கார்த்தி வந்திய தேவனாகவும் இதில் நடித்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா ராய் ராணி நந்தினி என்ற கேரக்டரிலும் திரிஷா இளவரசி குந்தவை என்ற கேரக்டரிலும் நடித்திருக்கின்றனர். ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் போஸ்டர் இன்று வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனால் படத்தின் டீசர் குறித்து பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

தற்போது பலரும் எதிர்பார்த்து வந்த அந்த டீசர் வெளியாகி இருக்கிறது. சோழர் கால திரை கதையான இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது பலரும் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலரும் அரசர்களுக்கே உரிய தோரணையில் மிரட்டி இருக்கின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா ஆகியோரின் மிடுக்கான தோரணையும் பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது. இதனால் இந்த திரைப்படம் தற்போது இந்திய சினிமாவையே மிரட்டும் அளவுக்கு இருப்பதாகவும், நிச்சயம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.