இந்த படம் ஹிட்டான நாம பண்ணலாம்.. தளபதிக்கு கதை கூறி காத்திருக்கும் இயக்குனர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம் என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் விஜய் இணையுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிற டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் விஜய் படத்தை இயக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது முற்றிலும் வதந்தி.

சிபி சக்ரவர்த்தி இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். அவ்வாறு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் உதவி இயக்குனராக சிபி சக்கரவர்த்தி பணியாற்றியுள்ளார்.

மேலும் இப்படத்தில் சில காட்சிகளிலும் நடித்துள்ளார். அப்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விஜய்யின் பீஸ்ட் படத்தையும் சிபி சக்கரவர்த்தி தான் இயக்கவுள்ளார் என்ற தகவல் அப்போது வெளியானது.

தற்போது இவருடைய டான் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் விஜய்யுடன் இணையுள்ளார் என்ற தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தைப் போல டான் படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி தளபதிக்கு கதை கூறிவிட்டு காத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.