இந்த வருடம் டபுள் ட்ரீட் தரப்போகும் சிம்பு.. படம் வெளியான பின் எகிறும் போகும் மார்க்கெட்!

அஜித் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கே போட்டி போடும் விதமாக சிம்புவின் இரண்டு திரைப்படங்கள் ஒரே வருடத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சிம்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீசான மாநாடு திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கிய இத்திரைப்படத்தில், சிம்பு, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தனுஷின் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளது

இதனிடையே பல வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும் சிம்புவின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படங்களை போட்டிப் போட்டு ஒரே நாளில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நார்தன் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் சிம்புவின் தந்தையும், நடிகர் மற்றும் இயக்குனருமான டி ராஜேந்தரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பை சிம்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனிடையே தற்போது பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வரும் சிம்பு, இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் இல்லாமல் இருந்த சிம்பு, உடல் எடை காரணமாகவும், பல சர்ச்சையின் காரணமாகவும், திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருந்தார். ஆனால் இந்த வருடம் சிம்புவிற்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.