இந்த வாரம் பிக் பாஸ் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போட்டியாளர்.. இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது ஓட்டிங் லிஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்கள் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அசீம், தனலட்சுமி, கதிரவன், மணிகண்டன், அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் மற்றும் ராம் என 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் எப்போதும் போல ரசிகர்களின் பேர் ஆதரவுடன் அசீம் முதல் ஆளாக காப்பாற்றப்பட உள்ளார். இவரைத் தவிர மற்றவர்களுள் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

Also Read : ஓபன் நாமினேஷனில் தேர்வான 7 பேர்.. பிக் பாஸ் கழுத்தை பிடித்து துரத்த போகும் அடுத்த போட்டியாளர்

இதில் கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன் ஆகியோர் அடுத்தடுத்த வாக்குகள் அதிகமாக பெற்ற காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர் மற்றும் ராம் தான். இதில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பதால் ராம் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ரக்ஷிதா உடன் சில்மிஷம் செய்து வரும் ராபர்ட் மாஸ்டரை பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்ப மனமில்லாமல் இந்த முறையும் காப்பாற்றி உள்ளனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த வாரம் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Also Read : மிச்சர் மட்டும் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?. 42 நாட்களில் நிவாவுக்கு வாரி வழங்கிய பிக் பாஸ்

போட்டிகளில் திறமையாக விளையாடும் மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் ஆவார். இப்போதுதான் மணிகண்டனின் திறமை மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலை மணிகண்டனுக்கு ஏற்பட்டுள்ளது.

இவரை விட பிக்பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாத பல போட்டியாளர்கள் உள்ள நிலையில் மணிகண்டன் வெளியேறுவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் இந்த வார எலிமினேஷன் எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை கொடுக்க உள்ளது.

bigg-boss-6-voting

Also Read : ரத்தம் வராமல் வார்த்தைகளால் அடிக்க போகும் கமல்.. ரணகளமாகும் பிக் பாஸ் வீடு