இவருக்கு ஈஸியா காலேஜ் ஸ்டுடென்ட் கெட்டப் போடலாம்.. மாஸ் ஹீரோவை இயக்கும் வெங்கட் பிரபு

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அஜித் மற்றும் விஜய் நடித்த மங்காத்தா 2 படத்தை வெங்கட் பிரபு இயக்கயுள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் உலாவியது.

ஆனால் தற்போது வெங்கட்பிரபு வசூல் மன்னனுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதாவது வெங்கட்பிரபு காலேஜ் ஸ்டோரி கதைக்களத்தில் ஒரு படத்தை எடுக்க உள்ளாராம். அதற்கு தகுந்தாற்போல ஹீரோவை தேர்வு செய்துள்ளார். மேலும் கதை எல்லாம் தயாராக வைத்துள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கயுள்ளது. டாக்டர், டான் என தொடர்ந்து 100 கோடி வசூல் வேட்டை ஆடி வரும் சிவகார்த்திகேயனின் படத்தை தான் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கயுள்ளார். டான் படத்திலேயே சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக அசத்தியிருப்பார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கவுள்ள படம் முழு நேர காலேஜ் ஸ்டுடென்ட் கதை களமாக இருக்க உள்ளது. இப்போதே வெங்கட்பிரபு கேம்பஸ், சிலபஸ் இப்படியெல்லாம் இந்த படத்திற்கு டேக் லைன் வைத்து அழகு பார்த்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே அயலான் படத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்நிலை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது. மேலும் முதல்முறையாக வெங்கட்பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.