இவ்வளவு செலவு செய்தும் பிரயோஜனம் இல்லை.. ஏமாற்றத்தில் தளபதி விஜய்

விஜய் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ரிலீஸ் ஆனதுமே சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர் அதிரி புதிரி பண்ணியது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது.

ஆனால் அந்த போஸ்டர்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவர தவறியது. ஏற்கனவே அந்த படத்தின் டைட்டில் இதுதான் என்ற ஒரு தகவல் ஊடகங்களில் கசிந்ததும் இதற்கு காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டர்கள் அனைத்தும் வேறு ஹிட் திரைப்படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ஆதாரத்தோடு கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனால் வேற லெவலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாட நினைத்த விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்தது. மேலும் இந்த போஸ்டர்கள் அனைத்தும் மிகவும் சிம்பிளாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ரசிகர்களுக்கு இந்த போஸ்டர்கள் பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்த போஸ்டர்களை டிசைன் பண்ணிய குழுவிற்கு தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 14 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார். இவர்கள்தான் ஏற்கனவே மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திற்கும் போஸ்டர் டிசைன் செய்தார்களாம். அந்தப் படத்திற்காக அவர்கள் சுமார் 12 லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் பிடிக்கவில்லை என்பதை அறிந்த படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் விஜய்யும் இந்த போஸ்டர்களால் திருப்தியடையாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவ்வளவு செலவு செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று தயாரிப்பாளர் நொந்துபோய் உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.