உண்மையை போட்டு உடைத்த ப்ளூ சட்டை மாறன்.. 500, 1000 கோடி எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

ப்ளு சட்டை மாறன் புது படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய மோசமான கருத்துக்கள் சிலரை பாதித்தாலும், பலர் இவரது விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் படங்களுக்கே செல்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. அதனால்தான் இவரது யூடியூப் சேனலை ஏகப்பட்ட பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது பகிரங்கமான கருத்து ஒன்றை வைத்துள்ளார். அதாவது சமீபத்தில் வெளியான டாணாகாரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தியேட்டர்களில் வெளியான கமலஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனால் திரையரங்குகளில் வெளியான ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கார்த்தியின் சுல்தான் படங்கள் தோல்வியை சந்தித்தது என ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது முற்றிலும் உண்மையான செய்தி என கூறியுள்ளார்.

பெரிய நடிகர்களின் ரசிகர்கள் வேண்டும் என்றால் 1000 கோடி, 500 கோடி இந்த படங்கள் வசூல் செய்ததாக போட்டோஷாப் பண்ணி சந்தோஷப்பட்டுகலாம். ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள். இந்தப் படங்களை இவ்வளவு வசூல் வசூல் செய்தது என்று சொன்னால் நம்பற மாதிரியா இருக்கு.

ஆனால் மாமனிதன், மாயோன், பட்டாம்பூச்சி, வேழம், யானை, டீ ப்ளாக் போன்ற கம்மி பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் தான் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இதனால் டாப் நடிகர்களாக இருந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே ஓடும்.

ஆனால் சில ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது என்று போலியாக கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையான சினிமா ரசிகர்களுக்கு இது தெரியும் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இந்தக் கருத்தை பார்த்த பலரும் ப்ளு சட்டை மாறன் கூறுவதும் சரிதான் என்று கூறிவருகிறார்கள்.