எலும்பும் தோலுமாக மாறிய நித்யானந்தா.. நோய் தாக்கியதால் 27 மருத்துவர்களுடன் சிகிச்சை

தமிழ்நாட்டில் சர்ச்சைகளின் மூலம் பிரபலமான வெகு சிலரில் நித்யானந்தாவும் ஒருவர். அப்படி சிறுமி கடத்தல், பாலியல் புகார்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தலைமறைவானவர்தான் இந்த நித்தியானந்தா. சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிறகு வெளிவந்த இவர் மீது இப்போது வரை ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

இந்நிலையில் நித்தியானந்தா திடீரென ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாச நாடு என்று பெயரிட்டு ஊடகங்களுக்கு அறிவித்தார். ஏகப்பட்ட வசதிகளைக் கொண்ட அந்த நாட்டில் இருந்து கொண்டு அவர் மக்களுக்கு சொற்பொழிவாற்றி வந்தார். அது குறித்தும் பல்வேறு செய்திகள் மீடியாவில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நித்யானந்தா உடல்நல குறைவு காரணமாக மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. சில காலம் வரை இவரை பற்றி எந்தவித செய்தியும் இல்லாமல் இருந்து வந்த மீடியாவில் தற்போது இந்த தகவல் வைரலாக பரவியது.

இதையடுத்து நித்யானந்தா தான் இன்னும் சாகவில்லை என்று நேரில் தோன்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் உடல் முன்பு போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது. மேலும் அவர் எனக்கு இருபத்தி ஏழு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அதிலிருந்து நான் இன்னும் வெளியே வர முடியவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் உள் வாங்கிக் கொண்டிருக்கிறது.

அதனால் எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால் கூட எனக்கு என்ன பிரச்சினை என்று கண்டறிய முடியவில்லை. அதைப்பற்றி அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் என்னால் சரியாக உணவு உண்ண முடியவில்லை தூங்க முடியவில்லை என் உடலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவர்களையும், பழைய விஷயங்களையும் கூட என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களை கண்டறிவதில் நான் சிரமப்படுகிறேன். ஆனால் நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று திரும்புவேன்.

nithyananda

இவ்வளவு பிரச்சினையிலும் நித்திய பூஜை மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் இறந்துவிட்டார் என்று வந்த செய்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் இந்த அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nithyananda

nithyananda

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.