எல்லாத்துக்கும் காரணம் ரஜினிதான்.. 15 வருடத்துக்கு பின் உண்மையை உடைத்த வைகைப்புயல்!

ஒரு காலத்தில் ரஜினி-வடிவேலுவின் கூட்டணி என்றால் அந்தப்படத்தில் அமைந்திருக்கும் காமெடி காட்சிகள் தாறுமாறாக இருக்கும். அப்படி இவர்களது கூட்டணியில் வாசு இயக்கத்தில் வெளியான குசேலன், சந்திரமுகி போன்ற படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அதிலும் வடிவேலு மற்றும் ரஜினியோட காம்பினேஷனில் நிறைய படங்கள் வந்தாலும் அந்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட படம் தான் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி. ‘மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு’ இந்த வசனத்தை இன்றுவரை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் வடிவேலு நிறைய நகைச்சுவை ஸ்கிரிப்ட்டுகளை சொல்லி இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்க முடியுமா, அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ஒரு சந்தேகம் இருந்தது.

இதை ரஜினியிடம் கூறியதும் நன்றாக இருக்கிறது. இதை நாம் பண்ணுகிறோம் என்று ரஜினியாகவே நிறைய விஷயத்தில் வடிவேலுவை ஊக்குவித்து இருக்கிறார். சந்திரமுகி படத்தில் அந்த மாதிரி நகைச்சுவை காட்சிகள் நன்றாக அமைந்ததற்கு காரணம் சூப்பர் ஸ்டார் தான்.

அவர் இல்லை என்றால், ஒருவேளை ரஜினி மட்டும் என்னை சுதந்திரமாக அந்தப்படத்தில் செயல்பட விடாமல் செய்திருந்தால் சந்திரமுகி திரைப்படத்தில் இந்த மாதிரி நகைச்சுவைகள் அந்த படத்திற்கு அமைந்திருக்காது என்று வடிவேலு 15 வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறியுள்ளார்.

எனவே ரஜினி-வடிவேலுவின் கூட்டணி மீண்டும் ரஜினியின் 169 ஆவது படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திலீப் குமார் இயக்கத்தில் இணைய உள்ளது இந்தப் படம் டார்க் காமெடி கொண்ட கதைக்களத்துடன் உருவாக போகிறது என சொல்லப்படுகிறது.

The post எல்லாத்துக்கும் காரணம் ரஜினிதான்.. 15 வருடத்துக்கு பின் உண்மையை உடைத்த வைகைப்புயல்! appeared first on Cinemapettai.