ஒட்டுமொத்த ரகசியமும் உடைந்து போச்சே.. கோபியில் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே சுவாரசியமாக கடந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பானது. பாக்யாவின் வீட்டிற்கு விருந்தினராக வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வெகுவிரைவிலேயே கோபியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்து கோபி-ராதிகா இருவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதலை மூர்த்தி கண்டுபிடித்து விடுகிறார்.

இதனை உறுதிப்படுத்த மூர்த்தியும் தனமும் ராதிகாவின் வீட்டிற்கு சென்று கோபி தான், ராதிகா திருமணம் செய்து கொள்ளும் நபர் என்பதை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். இதை எப்படி பாக்யா குடும்பத்திற்கு தெரியப்படுத்த முடியும் என்றும் மனக்கலக்கம் அடைகின்றனர்.

இருப்பினும் இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என கோபியை மட்டுமாவது விரட்டி வைக்க வேண்டுமென மூர்த்தி கோபியிடம் தனியாக பேசுகிறார். அனைத்து உண்மையையும் மூர்த்தி தெரிந்து கொண்டார் என தெரிந்ததும் அவரிடம் தாறுமாறாக திமிருடன் கோபி பேசுகிறான்.

இவர்கள் இருவரும் சத்தமாக சண்டை போடுவது வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கும் கேட்டு விட, அவர்கள் கதவை தட்டி என்ன நடக்கிறது என கேட்கின்றனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த மூர்த்தி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிடலாம் என கோபியை விரட்டினாலும் கோபி, ‘போய் சொல்லிக்கோ’ என கொஞ்சம் கூட பயம் இல்லாமல் எதற்கும் துணிந்தவன் ஆக மாறுகிறான்.

அதன்பிறகு கோபியின் அம்மாவிடம் மூர்த்தி தெரியப்படுத்த நினைக்கும்போது தனம் அதை தடுத்து நிறுத்துகிறார். ஏனென்றால் இந்த விஷயம் தெரிந்தால் நிச்சயம் பாக்யாவின் குடும்பம் நிலை குலைந்து விடும். ஆகையால் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ராதிகா வீட்டிற்கு சென்று, கோபி நல்லவர் அல்ல அவரைத் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என வார்னிங் கொடுக்கின்றனர்.

இருப்பினும் ராதிகா தன்னுடைய முதல் திருமணத்தில் செய்த தவறை இரண்டாவது திருமணத்தில் சரி செய்து தக்க வைத்துக்கொள்ள தான் நினைப்பாள். கோபியை கல்லூரியில் இருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதால் அவ்வளவு சீக்கிரம் கோபியை விட்டுக் கொடுக்க மாட்டாள்.

பாக்யாவின் கணவர்தான் கோபி எனத் தெரிந்தாலும், ராதிகா நிச்சயம் கோபியை விட்டு விலகாமல் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வார். அப்படி நடந்தால் பாக்யாவிற்கு இனிவரும் நாட்களில் ராதிகா தான் வில்லியாக மாறப் போகிறாள்.

The post ஒட்டுமொத்த ரகசியமும் உடைந்து போச்சே.. கோபியில் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ்! appeared first on Cinemapettai.