ஒரு படம் என்ன 100 படம் பண்ண கூட ரெடி.. சுவாரசியமான பதிலளித்த லோகேஷ்

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது உலக நாயகனே வைத்த விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் சென்ற வாரம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் லோகேஷ் உடன் பணியாற்றுவேன் என கமலஹாசன் கூறியிருந்தார். அதற்கான வாய்ப்பு உள்ளதா என லோகேஷ் இடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ், சார் கூப்பிட்டால் உடனே போய் பண்ணுவேன், ஒன்னு என்ன நூறு படம் கூட பண்ணுவேன், அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஆனால் உடனே இது தொடங்குவது தற்போது சாத்தியமில்லாதது.

கமலஹாசனும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதற்கான நேரம் வரும் போது கண்டிப்பாக உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவேன் என லோகேஷ் கூறியுள்ளார். இதனால் கண்டிப்பாக விக்ரம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்து தளபதி 67 படத்தில் இயக்கவுள்ளார். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் படத்தில் விஜய் இணைவார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.