ஒரே கூட்டணியோடு நின்றுபோன படம்.. மக்கள் ஏங்கியும் கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார்

இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த ஒரு படம் இன்று வரை மக்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு படமாக இருந்து வருகிறது.

ரஜினிக்கு நிறைய படங்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் சில படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவை. அந்த வகையில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா, படையப்பா, தளபதி, சிவாஜி, அண்ணாமலை போன்ற படங்கள் இன்று வரை எல்லாருடைய மனதிலும் நீங்காத இடம் பெற்று வருகிறது.

இந்த படங்களில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா படம் ரஜினி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். இன்று வரை மக்கள் அந்த மாதிரி ஒரு படத்தை ரஜினி நடிப்பில் திரும்ப பார்க்க ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதே  கூட்டணியில் இதுவரை ரஜினி படம் அமையவில்லை.

அந்த படத்தில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன், ரஜினியின் அப்பாவாக சிவாஜி கணேசன், சித்தப்பாவாக மணிவண்ணன் போன்ற நடிப்பில் மிரட்ட கூடிய ஜாம்பவான்கள் அனைவரும் நடித்து இருப்பார்கள்.

இவர்கள் எல்லோரும் இணைந்து இன்றுவரை படையப்பா படம் போல் ஒரு படம் கொடுக்கவில்லை என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்தப்படத்தில் இவர்களையும் தாண்டி லக்ஷ்மி மற்றும் ராதாரவி என நடிப்பில் கலக்கக்கூடியவர்கள் நடித்துள்ளனர்.

படையப்பா படம் கிட்டத்தட்ட 200 நாட்கள் ஓடி வெள்ளிவிழா படைத்தது. வசூலில் ரஜினிக்கு நல்ல ஒரு லாபத்தை கொடுத்தது. இந்த படத்தின் கதையை கேஎஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரஜினி, இந்த படத்திற்கு நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தில் ஒரு பெண் வில்லி வேண்டும் என்று  கூறினாராம். அவர் நம்பிக்கைக்கு ஏற்ப அந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு நடித்திருப்பார்.

அதன்பின் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு சவால் நிறைந்த கேரக்டர்கள் குவிந்தது. நிறைய படங்களில் துணிச்சலான கேரக்டரில் ஜொலித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

The post ஒரே கூட்டணியோடு நின்றுபோன படம்.. மக்கள் ஏங்கியும் கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார் appeared first on Cinemapettai.