ஒரே படத்தை 300 தடவை பார்த்த விக்னேஷ் சிவன்.. எந்தப்படம் தெரியுமா?

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் அதிக அளவில் பிரபலம் ஆனார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து அவர் அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

தற்போது ஏகே 61 திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் அஜித் அந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஒரே திரைப்படத்தை 300 தடவைக்கு மேல் பார்த்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ஹாலிவுட் திரைப்படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படம் எனக்கு மிகவும் பிடித்த படம். என் வாழ்வில் இந்த திரைப்படத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதனால் நான் எப்போது நினைத்தாலும் அந்த திரைப்படத்தை பார்த்து விடுவேன்.

அந்த வகையில் இந்த படத்தை நான் கிட்டத்தட்ட 300 தடவைக்கு மேல் பார்த்து ரசித்திருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த ஹாலிவுட் திரைப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.