ஒரே மாதிரி கதையில் வெளிவந்த மூன்று படங்கள்.. திருச்சிற்றம்பலம் போல் ஹிட்டடித்த 2 படங்கள்

தமிழ் சினிமா ஒரு தலையான ஆண்கள் காதலை சொல்லும் விதமாக பல படங்களை எடுத்துள்ளனர். ஆனால் சொல்லப்படாத பெண்களின் காதல் கதையை வைத்து சில படங்கள் தான் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒரே ஜானரில் மூன்று படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

சமீபத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் ஒரு தலையாக தனுஷை விரும்புகிறார். ஆனால் ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரை தனுஷ் காதலித்து பிரேக்கப் ஆகிறது.

Also Read : தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள்.. கடைசி நேரத்தில் மாற்றியதால் தப்பித்த திருச்சிற்றம்பலம்

அதன்பின்பு பாரதிராஜாவின் அறிவுறுத்தலின்படி நித்யா மேனனின் காதலை தனுஷ் புரிந்து கொள்கிறார். அதைப்போல் ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங் அசோக் செல்வனை விரும்புகிறார். அதன்பின்பு ரித்திகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் அசோக் செல்வனும் திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் ரித்திகா சிங்கை தனது மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் விவாகரத்து வரை அசோக் செல்வன் செல்கிறார். அப்போது கடவுளாக உள்ள விஜய் சேதுபதி வாழ்க்கையை மாற்ற அசோக் செல்வனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கிறார். அதன்பின்பு வாணி போஜனை காதலித்தாலும் கடைசியில் ரித்திகாவின் காதலை உணர்ந்த அவருடன் சேர்கிறார்.

Also Read : மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் புகைப்படம்.. விவாகரத்துன்னு சொன்னதெல்லாம் கட்டுக்கதையா!

இந்நிலையில் திருச்சிற்றம்பலம், ஓ மை கடவுள் படங்களுக்கு அஸ்திவாரம் போட்ட படம் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி. இப்படத்தில் தனது சிறுவயது தோழியான பூமிகாவின் காதலை புரிந்து கொள்ளாத விஜய் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுகிறார்.

ஆனால் பணத்துக்காக காதலித்த அந்தப் பெண் வேறு ஒரு நபரை தேடி செல்கிறார். பின்பு பூமிகா தான் தன்மீது உண்மையான காதல் வைத்துள்ளார் என்பதை உணர்ந்து அவரை ஏற்றுக் கொள்கிறார் விஜய். இவ்வாறு ஒரே ஜானரில் வெளியான இந்த மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

Also Read : விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு

The post ஒரே மாதிரி கதையில் வெளிவந்த மூன்று படங்கள்.. திருச்சிற்றம்பலம் போல் ஹிட்டடித்த 2 படங்கள் appeared first on Cinemapettai.