ஒரே வரி கதையில் ஓகே செய்த மணிரத்னம்.. 21 வருடம் கழித்து இணையும் கேங்ஸ்டர் கூட்டணி

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய சினிமாவுக்கே சவால் விடும் அளவுக்கு பல பிரம்மாண்ட காட்சிகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு மற்றும் ஓர் பெருமையை தேடித் தரும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து மணிரத்தினம் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிவிட்டது.

இவர்களின் கூட்டணியில் வெளியான தளபதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ரஜினியின் சினிமா வாழ்வில் முக்கிய இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது.

மணிரத்னம் மற்றும் ரஜினி இருவரும் கடந்த மாதம் நடைபெற்ற நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றனர். மேலும் மணிரத்தினம் ஒன் லைன் கதையையும் ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

ரஜினிக்கும் அந்த கதை ரொம்ப பிடித்துப் போகவே அதை டெவலப் செய்யுங்கள் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சம்மதித்திருக்கிறார். இதனால் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு அடுத்ததாக ரஜினிக்காக கதையை தயார் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இந்த கேங்ஸ்டர் கூட்டணி மற்றொரு கதையின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க களமிறங்க இருக்கிறது. ரஜினி இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அதை முடித்துவிட்டு அவர் மணிரத்தினத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.