ஓவர் சென்டிமென்ட் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் டான் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற அந்த படத்தை தொடர்ந்து அவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தற்போது வசூல் நாயகனாக மாறி வருவது தான். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.

இதனாலேயே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாய் உற்றுபார்த்து செயற்பட்டு வருகிறார். இப்போது அவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயன் சமீபகாலமாக படங்களை ரிலீஸ் பண்ணுவதில் ஓவர் சென்டிமென்ட் பார்த்து வருகிறாராம்.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் பிரின்ஸ் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த படம் தீபாவளி அன்று வெளியாகப் போவதாக தகவல் வந்தது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் தான் விநாயகர் சதுர்த்திக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தீபாவளிக்கு மாற்றி விட்டாராம்.

இதற்கு காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரின் சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தான் வெளியாகி இருந்தது. சிவகார்த்திகேயன் சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் ஏமாற்றத்தை கொடுத்தது.

மேலும் அந்தப் படத்தை தயாரித்திருந்த ஆர் டி ராஜாவுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அதை மனதில் வைத்து தான் சிவகார்த்திகேயன் சென்டிமென்டாக விநாயகர் சதுர்த்தி அன்று பிரின்ஸ் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்ததாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.