கதிரால் வீட்டிற்கு வராத ஜீவா.. மீனா எடுத்த வில்லத்தனமான முடிவு!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக்குடும்பமாக நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழ்ந்த குடும்பத்தில் அடுக்கடுக்காக அடுத்தடுத்த பிரச்சினைகள் வெடிப்பதால் சீரியலை சோக கடலில் மூழ்கி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கதிர்-முல்லை தன்மனத்திற்காக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதன்பிறகு இதைத் தாங்க முடியாத மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் தனம் எவ்வளவோ கெஞ்சி கதறி கூப்பிட்டாலும் அவன் தன்னுடைய மனைவிக்காக வாங்கிய ஐந்து லட்ச கடனை அடைத்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன் என பிடிவாதமாக இருக்கிறான்.

இவனுடைய இந்த பிடிவாதத்தால் ஜீவா தான் முழுநேரமாக பாண்டியன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கண்ணன் மருத்துவமனையில் இருக்கும் மூர்த்தி அண்ணனை பார்த்துக் கொள்கிறான். இதனால் அவனாலும் ஜீவாவுக்கு உதவ முடியவில்லை.

ஆகையால் கடையே கெதி என்று ஜீவா சரியாக கூட வீட்டுக்கு வராமலும், தன்னுடைய மகன் கயலை பார்க்காமலும், ஒழுங்காக சாப்பிடாமலும் இருப்பதால் மீனா காட்டேரி இருக்கிறாள். நான்கு அண்ணன் தம்பிகளில் ஜீவா தான் எல்லா கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்கிறான். அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என மீனா வில்லத்தனமாக யோசித்து ஒரு முடிவெடுக்கிறாள்.

தனியாக கடையை பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய அப்பாவிற்கு மீனா இனி வரும் நாட்களில் உதவப் போகிறார். தன்னுடைய அப்பாவின் டிபார்ட்மெண்ட் ஸ்டோரை தினமும் சென்று பார்த்துக் கொள்ளப் போகிறாள். குழந்தையை அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு செல்ல போகிறாள்.

இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்சனை எழும், ஜீவாவிற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதற்காகவே மீனா இப்படி ஒரு வேலையை பார்க்கப் போகிறாள். இவை எல்லாம் இனி வரும் நாட்களில் நடக்குமா அல்லது நம்முடைய கணிப்பு தானா என அடுத்த வாரம் வரும் ப்ரோமோவில் தெரிந்துவிடும். அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

The post கதிரால் வீட்டிற்கு வராத ஜீவா.. மீனா எடுத்த வில்லத்தனமான முடிவு! appeared first on Cinemapettai.