கமலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்.. எத்தன வாட்டி பார்த்தாலும் சலிப்பு தட்டல!

மல்டிஸ்டார் திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என்ற அஸ்திவாரத்தை உலகநாயகன் கமலஹாசன் தோற்றுவித்துள்ளார். கமலஹாசன் நடித்த திரைப்படங்கள் அவர் வளர்ந்து வந்த 80 காலக்கட்டத்தில், ரஜினிகாந்துடன் பல திரைப்படங்களில் ஒன்று சேர்ந்து மல்டிஸ்டார் படமாக நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்குப் பின் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் மார்க்கெட் வளர, தனித்தனியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். இதன்பின்னர் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் விஜய், சூர்யா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அப்பாஸ், அஜித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்,

சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான, பேட்ட திரைப்படத்தில் பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார் உள்ளிட்ட மல்டிஸ்டார் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே கமலஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஷாருகானுடன் நடித்து அசத்தினார்.

அதேபோல நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபுதேவாவின் காதலா காதலா திரைப்படத்திலும் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார். இத்திரைப்படமும் கமர்ஷியல் ரீதியான வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பாகத் பாசில் காளிதாஸ் ஜெயராம், சூர்யா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கமலஹாசன் மல்டி ஸ்டார் திரைப்படத்தில் தயாரித்தும், நடித்தும் உள்ளார்.

விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசான 10 நாட்களில் 200 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளது. மேலும் இத்திரைப்படம் 500 கோடி வரை வசூல் சாதனை படைக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்ட முடியாது என்ற நிலையில் தமிழ் சினிமா இருந்தது.

விக்ரம் திரைப்படத்தில் மல்டி ஸ்டார் நடிகர்களை நடிக்க வைத்து 500 கோடி வரை வசூல் சாதனையை ஈட்டலாம் என கமலஹாசன் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நிரூபித்து அஸ்திவாரமாக அமைந்துள்ளார். இதன் பின் தல தளபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது திரைப்படங்களில் மல்டிஸ்டார் பட்டாளங்களை வைத்து நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அருண் விஜய்யின் யானை போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தள்ளிப் போட்டுள்ளனர். யானை படக்குழு இன்று கமலை சந்தித்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

arun-vijay-yaanai

The post கமலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்.. எத்தன வாட்டி பார்த்தாலும் சலிப்பு தட்டல! appeared first on Cinemapettai.