கமலுடன் இணையும் ரஜினிகாந்த்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளப்பிய விக்ரம்

கமல்ஹாசன் மற்றும் ரஜினி இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் இதுவரை ஒருவரை ஒருவர் தாக்கி பேசியதே கிடையாது. அதேபோன்று இவர்களுடைய ரசிகர்களுக்கும் எந்த சண்டையும் வந்தது கிடையாது.

தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு சோசியல் மீடியாவையே ரணகளமாக்கி வருகின்றனர். அப்படியிருக்கும்போது பல வருடங்கள் கடந்தும் இவர்களுடைய நட்பும், அன்பும் பலரையும் வியக்க வைக்கிறது. அதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் கூறப்பட்டாலும் தற்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார். அதனால் இந்தப் படத்தைக் காணும் ஆவல் கமலின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல திரை பிரபலங்களுக்கும் இருக்கிறது.

மேலும் படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்கள் உட்பட முன்னணி திரைப்பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதில் கமலின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தும் கலந்து கொள்ள இருக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக எந்த பொது விழாக்களுக்கும் அதிகம் வராத சூப்பர் ஸ்டார் தன் நண்பன் கமலுக்காக இதில் கலந்துகொள்ள இருக்கிறார். அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

ரசிகர்கள் ஆண்டவரின் நடிப்பை திரையில் பார்த்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதன் காரணமாகவே இந்த படத்தின் வெளியீட்டு நாளை எண்ணி அவரின் ரசிகர்கள் பரபரப்பாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படி அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.

The post கமலுடன் இணையும் ரஜினிகாந்த்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளப்பிய விக்ரம் appeared first on Cinemapettai.