கமலும் இல்லை, விஜய் சேதுபதியும் இல்லை.. டாப் ஆக்டரை பிடித்த வினோத்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வினோத் அடுத்ததாக கமல் அல்லது விஜய் சேதுபதியை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு நடிகரை அவர் இயக்க இருக்கிறார்.

அஜித் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் துணிவு திரைப்படத்தை இயக்கி வரும் வினோத் அடுத்ததாக யாருடன் இணைய இருக்கிறார் என்ற செய்திதான் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்னும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகவில்லை.

அதைப்பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அவர் இப்போது மற்ற மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அந்த திரைப்படம் இப்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Also read: எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

அதைத்தொடர்ந்து வினோத் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற உறுதியான தகவல்கள் வெளிவந்தது. கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் பலபரப்பாக எதிர்பார்த்த வேளையில் கமல் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் உருவாகும் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.

இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைவது பெரும் ஆர்வத்தை தூண்டியது. ஆனாலும் வினோத் கமலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலும் இல்லை விஜய் சேதுபதியும் இல்லை வேறு ஒரு நடிகரை தான் வினோத் இயக்க இருக்கிறார்.

Also read: அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்.. நீங்க வேற லெவல்ல யோசிக்கிறீங்க ப்ரோ!

அந்த வகையில் வினோத் நடிகர் தனுஷை வைத்து தான் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் திரைப்படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக வினோத்துடன் இணைய இருக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருக்கிறார்.

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பரபரப்பாக படமாகப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு அவர் வினோத் இயக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கிறார். தொடர்ந்து அஜித் திரைப்படங்களை இயக்கி வந்த வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்க இருப்பது எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

Also read: வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி