கறார் காட்டிய சிவகார்த்திகேயன்.. செய்வதறியாது முழிக்கும் இயக்குனர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பிரின்ஸ் திரைப்படம் இந்த வருட தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அனுதீப் இயக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா என்ற வெளிநாட்டு ஹீரோயின் நடித்து வருவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அந்தப் படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். ஆனால் அதில் தான் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது சமீப காலமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் திரைக்கதையில் சில சொதப்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் இனிமேல் நடிக்க இருக்கும் திரைப்படங்களின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் அப்படத்தில் சில குறிப்பிட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதை தொடும் வகையில் அமைந்தது. இருப்பினும் அந்த ஒரு சில காட்சிகளை தவிர மற்றபடி படத்தின் திரைக்கதையில் சில தொய்வு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதனால் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா பட இயக்குனரிடம் திரைக்கதையில் கூடுதல் கவனம் எடுத்து எழுதும்படி கூறியிருக்கிறார். அதற்கு முன்பு அவர் தயார் செய்திருந்த கதையைக் கேட்ட சிவகார்த்திகேயன் அதில் ஒரு சில மாற்றங்கள் செய்யும் படியும் கூறியுள்ளார்.

இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளிப் போகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் திரைக்கதையில் மாற்றம் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார். ஆனாலும் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை இரண்டு மாதத்திற்கு தள்ளி வைத்து விட்டாராம்.

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி விட்டு அடுத்ததாக சில முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கவும் அஸ்வின் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் காட்டும் கறாரால் அவர் செய்வதறியாது முழித்து வருவதாக கூறப்படுகிறது.

The post கறார் காட்டிய சிவகார்த்திகேயன்.. செய்வதறியாது முழிக்கும் இயக்குனர் appeared first on Cinemapettai.