காதலியை கரம்பிடிக்கும் புகழ்.. வெளியான திருமண தேதி

குக் வித் கோமாளி பிரபலம் புகழ், அவருக்கும் அவருடைய காதலி பென்சிக்கும் திருமணம் நடைபெற இருப்பதை திருமண தேதியுடன் பகிர்ந்துள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி மூலம் விஜய் டிவிக்கு வந்த புகழ், கலக்க போவது யாரு, சிரிச்ச போச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் குக் வித் கோமாளி தான் அவருக்கு சினிமா துறையில் வெளிச்சம் காட்டியது. அவருடைய டைமிங் காமெடியும், முக பாவனையும் தான் அவருடைய வெற்றிக்கு காரணம். ஆரம்ப நாட்களில் பெண் வேடமணிந்து நடித்து வந்த புகழ் பின்பு அதை நிறுத்தி விட்டார்.

Also read: “புகழ்” நடிக்கப் போனதால் வந்த சோதனை.. நன்றியை மறக்காமல் காப்பாற்றி விடப் போகும் நடிகர்

குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் புகழ், தன்னுடைய காதலையும், காதலியான பென்சியையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். பென்சி ரியா கோயம்புத்தூரை சேர்ந்தவர். ஒரு கலைநிகழ்ச்சியின் போது இருவரும் சந்தித்து, பின்பு நட்பு காதலாக மாறியது.

புகழுக்கும், பென்சிக்கும் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் பரவின. இதனை உறுதி செய்யும் விதமாக புகழ் அவருடைய திருமண தேதியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வரும் செப்டெம்பர் 5 ஆம் தேதி புகழுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இப்போது பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: ரியாலிட்டி ஷோவில் முதல் 5 இடத்தை பிடித்த விஜய் டிவி பிரபலங்கள்.. பிரியங்காவை பின்னுக்கு தள்ளிய புகழ்

குக் வித் கோமாளியில் இவர் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவிடம் செய்யும் வம்புகளை ரசிகர்கள் அதிகம் ரசித்தனர். புகழ்-பாலா, புகழ்-ஷகிலா, புகழ்-சிவாங்கி, புகழ்-பாபா மாஸ்டர் காம்போவில் காமெடிகள் அனைத்தும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. விடாமுயற்சி, கடின உழைப்பு நிச்சயம் வெற்றி தரும் என்பதற்கு புகழ் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

Also read: ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ்.. கலக்கலான டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

குக் வி கோமாளி இரண்டாவது சீசனிற்கு பின்னர் புகழுக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டன. அஜித்தின் வலிமை, சிக்ஸர், யானை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.