கின்னஸ் சாதனை படைத்த ரோஜா.. ஒரே நேரத்தில் 3000 கிளிக்

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினி, பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களின் படங்களில் ரோஜா நடித்திருந்தார்.அந்த காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த ரோஜா இயக்குனர் ஆர் கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார். குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த ரோஜா அவ்வப்போது சின்னத்திரை தொடர்களில் தலைகாட்டி வந்தார். அதன் பிறகு அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

ஆந்திரா மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பாக நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் சமயத்தில் இவருடைய பரப்புரை மிகவும் வைரலானது. இந்நிலையில் அவ்வப்போது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுக்கப்பட்டது.

இதை ரோஜாவின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அதாவது விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3000 போட்டோகிராபர்களை வரவழைக்கப்பட்டிருந்தனர். அங்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மேடையில் ரோஜா தோன்றி இருந்தார்.

அப்போது ஒரே நேரத்தில் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் 3000 போட்டோக்களை போட்டோகிராபர்கள் எடுத்துள்ளனர்.மேலும் ரோஜா அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரோஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

Roja

ரோஜா அமைச்சர் பதவி ஏற்ற பின்பு மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வந்த நிலையில் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இதனால் தற்போது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ரோஜாவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.