கொடூர சைக்கோ வில்லனாக மாறிய ஜெய்.. இந்த முயற்சியாவது ஜெயிக்குமா?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜெய் சொந்த பிரச்சனையின் காரணமாக சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.

அதில் தில்லு முல்லு, நாங்க ரொம்ப பிஸி போன்ற திரைப்படங்களை இயக்கிய பத்ரி பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் ஜெய் கொடூர சைக்கோ வில்லனாக நடித்து வருகிறார். சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தை குஷ்பூ தயாரித்துள்ளார்.

80 கால கட்டத்தில் நடக்கும் படி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெய் ஒரு சைக்கோ கொலைகாரன் கேரக்டரிலும், சுந்தர் சி போலீசாகவும் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டி தான் இந்த கதை களம் என்று கூறப்படுகிறது.

சமீபகாலமாக ஜெய்யின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஜெய் இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த படத்தில் ஜெய் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறாராம். மேலும் அவர் முதன்முறையாக சுந்தர் சியுடன் இணைந்து இப்படத்தில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அந்த வகையில் இந்தப் படம் குறித்து சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது படத்தின் ப்ரோமோ பாடலும் வெளியாகி ஆர்வத்தை தூண்டியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் ஜெய்க்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.