சிங்கம் படத்தில் ஏமாற்றி நடிக்க வைத்த ஹரி.. இப்பவரை கண்ணீர்விட்டு புலம்பும் பிரபல நடிகை

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிங்கம். இப்படம் சூர்யாவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு சூர்யா மற்றும் ஹரி இருவரும் இணைந்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய பாகங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டனர். சிங்கம் படத்தின் அனைத்து பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹரி படம் என்றாலே காட்சிக்கு காட்சி பக்கம் பக்கமாக வசனம், அருவா விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை என அசத்தியிருப்பார். சிங்கம் திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. அதாவது சூர்யாவின் 25 திரைப்படமாக தான் சிங்கம் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் வெற்றியை பார்த்த மற்ற நடிகர்கள் தங்களது மொழிகளில் ரீமேக் செய்து நடித்தனர்.

சின்னத்திரை நடிகையாக வனஜா தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் மெட்டி ஒலி சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு மெட்டி ஒலி சீரியல் மற்றும் சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

சிங்கம் திரைப்படத்தில் பெண் ரவுடியாக வனஜா நடித்திருப்பார். வாய் பற்களில் பான்பராக் கரையுடன் பெண் ரவுடியாக நடித்திருப்பார். சமீபத்திய பேட்டியில் ஹரி அவர்கள் தன்னுடைய கதாபாத்திரத்தை தெளிவாகச் சொல்லாமல் ஏமாற்றி சிங்கம் படத்தில் நடிக்க வைத்து விட்டதாக கூறினார்.

மேலும் வனஜா சிங்கம் படத்தில் ஏண்டா நடிச்சோம்னு என இருக்கும். படத்தை பார்த்துவிட்டு நிறைய பேரு உனக்கு இது தேவையில்லாத வேலை என கூறினர். ஆனால் அந்த கேரக்டரில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். என் கணவர் ஹரி சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். எனக்கு அப்ப கல்யாணம் ஆகல ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் போகும்போது ஹரி அவர்கள் வாயில் பான்பராக் போட்டுவிட்டு நடிக்கும்படி கூறினார். நான் முடியவே முடியாது என கூறினேன். அந்த படத்தோட முதல் நாளே என்னுடைய கணவருக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்டது என கூறினார்.

அப்புறம் என்னோட அப்பா தான் சமாதானம்படுத்தி தன்னை அப்படத்தில் நடிக்க வைத்தார். ஆனா மெட்டி ஒலி அப்புறம் எனக்கு ரீச் கொடுத்தது என்றால் சிங்கம் திரைப்படம் தான் என வனஜா கூறினார்.