சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம்.. கீர்த்தி சுரேஷுக்கு பாடம் புகட்டிய பிரபலம்

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகர் ஜெயம் ரவி ஒரு மேடை விழாவில் பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடன் வந்திருக்கிறார். அப்போது அவர்களுக்கு அருகில் கீர்த்தி சுரேஷும் இருந்திருக்கிறார்.

Also read:விஜய் சேதுபதியுடன் இணைய இருந்த கீர்த்தி சுரேஷ்.. ராமராஜனால் நடந்த டிவிஸ்ட்

விழா நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு முக்கியமான போன் வரவே அவர் எழுந்து சென்று பேசியிருக்கிறார். போன் பேசிவிட்டு திரும்பி வரும்பொழுது ஜெயம் ரவி உட்கார்ந்திருந்த இடத்தில் வேறு யாரோ ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

அதனால் அவர் வேறு வழியில்லாமல் கொஞ்சம் தள்ளி வேறு ஒரு சீட்டில் அமர்ந்திருக்கிறார். இதை பார்த்துக் கொண்டே இருந்த கீர்த்தி சுரேஷ் எழுந்து சென்று ஜெயம் ரவியை அவர் மனைவியுடன் உட்காருங்கள் என்று கூறி தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்.

Also read:இதுலாம் ஒரு டிரஸ்ஸ, சுத்தமா செட் ஆகல.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்

அதைப் பற்றி பேசிய ஜெயம் ரவி சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம். ஆனால் கீர்த்தி எனக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கேட்டு அங்கு மேடையில் இருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். இதை கீர்த்தி சுரேஷ் சிறு வெட்கத்துடன் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷை கிண்டலாக கூறியிருந்தாலும் அவர் கூறிய அந்த விஷயம் மிகவும் முக்கியமானது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் ஜெயம் ரவியை அவருடைய மனைவியுடன் சேர்த்து வைத்த பெருமை கீர்த்திக்கே சேரும் என்றும் அவர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Also read:மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி