சின்ன பையனு அசால்ட்டா நெனச்சது தப்பா போச்சே.! அக்கட தேசத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்த லவ் டுடே

இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தற்போது திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. முதலில் இந்த படத்தை யாரும் தயாரிப்பதாகவும் இல்லை. தற்போது தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தயாரித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் தில் ராஜு இந்த படத்தை வாங்கி தெலுங்கில் ரிலீஸ் செய்ய உள்ளார்.

முதலில் இவர் இந்த படத்தை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஒரு சின்ன பையன் அவனே இயக்கி நடித்து படத்தை பல கோடி சம்பாதிக்கும் அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது லவ் டுடே படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் உரிமையாளர்கள் லவ் டுடே படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகளை ஒதுக்கி உள்ளனர்.

Also Read: வாழ்க்கை ஒரு வட்டம்டா.. 8 வருடம் கழித்து விஜய் காலில் விழுந்த லவ் டுடே இயக்குனர்

18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 3 கோடி வசூல் செய்திருந்தது. நான்கு நாட்களில் 17.75 கோடி வசூலை எட்டி உள்ளது. இப்போது போட்ட வசூலை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதால் இனி வருவது எல்லாம் படக்குழுவுக்கு லாபம் தான்.

லவ் டுடே படத்திற்கு கிடைக்கும் வெற்றியைப் பார்த்து பலரும் பிரம்மிக்கின்றனர். எனவே லவ் டுடே இயக்குனருக்கு அடுத்து அதிர்ஷ்டமாக இந்த படத்தை வேறு மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யும் முடிவில் படக்குழு உள்ளது.

Also Read: காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

இதனால் முதலில் தெலுங்கில் இந்த படத்தை வாங்க மறுத்த தயாரிப்பாளர்கள், இப்பொழுது இந்த படத்தை வாங்கி ஆந்திராவில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இந்த படத்தை வாங்கும் தில் ராஜ், ‘முதலில் சின்ன பையனு பிரதீப் ரங்கநாதனை நெனச்சது தப்பா போச்சே’ என்று இப்போது இந்த படத்தின் மூலம் எப்படியாவது 20 கோடி யாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வெளியிடுகிறார்.

தமிழில் லவ் டுடே திரைப்படம் நல்ல வசூலை பெற்றதால், தற்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட படத்தின் இயக்குனரின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் முடிவெடுத்து இருக்கிறார். இதன் பிறகு அக்கட தேசத்திலும் பிரதீப் ரங்கநாதன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு டாப் கொடுக்க போகிறார்.

Also Read: இளசுகளின் கனவு கன்னியாக மாறிய லவ் டுடே இவானா.. தம்மாத்துண்டு இடுப்பை காட்டி மயக்கிய புகைப்படங்கள்