சிபிராஜ் மிரட்டும் ரங்கா படம் எப்படி இருக்கு.? புது முயற்சி கைகொடுக்குமா.?

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் அதில் ஜெயிக்க முடியாமல் வில்லனாக மாறிய நடிகர்களில் நடிகர் சிபிராஜும் ஒருவர். ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கும் அவர் எப்படியாவது ஹீரோவாக ஜெயித்துவிட வேண்டும் என்று கஷ்டப்பட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவரின் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் ரங்கா. த்ரில்லர் படமாக வெளிவந்துள்ள இப்படத்தை வினோத் டி எல் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜுடன் இணைந்து நிகிலா விமல், சதீஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி நாயகன் சிபிராஜ் ஒரு வித்யாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது அவருடைய வலது கையில் ஒரு ஸ்மைலி பால் எப்போதும் இருக்கும். ஏனென்றால் அந்த பால் இருந்தால் தான் அவருடைய கை மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும். இந்நிலையில் அவர் தன் காதலி நிகிலா விமலை திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கு மணாலி செல்கிறார்.

அங்கு ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து அங்கு வரும் ஜோடிகளின் அந்தரங்க விஷயங்களை வீடியோ எடுப்பதை சிபிராஜ் தெரிந்து கொள்கிறார். இதன் மூலம் வில்லன்களிடம் அவர் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

எப்படியாவது இந்த படத்தின் மூலம் ஒரு வெற்றியை தக்க வைத்து விட வேண்டுமென்று சிபிராஜ் நிறைய மெனக்கெட்டுள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். ஆனால் பல இடங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது. மேலும் படத்தில் நிறைய கேரக்டர்கள் வந்து போனாலும் அவர்களின் நடிப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் மணாலியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அந்த காட்சி அமைப்பு ரசிக்கும் வகையில் இருக்கிறது. மற்றபடி படத்தில் இடம் பெற்றுள்ள அதிகப்படியான பாட்டுகள் சலிப்பைத் தருகிறது. அதிலும் வில்லன் கதாபாத்திரமும் தெளிவாக இல்லை.

இப்படி படத்தில் பல சறுக்கல்கள் இருக்கிறது. அதனால் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியான காட்சிகள் எதுவும் இல்லை. அந்த வகையில் சிபிராஜின் இந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதற்குப் பிறகாவது அவர் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.