சிவகார்த்திகேயனுக்கு எதிராக கிளம்பிய நடிகைகள்.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க

சிவகார்த்திகேயன் தற்போது வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அதாவது இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. இதனால் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை வித்தியாசமாக வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் அறிவித்தார்.

அதில் இயக்குனர், சத்யராஜ், சிவகார்த்திகேயன், படத்தின் கதாநாயகி ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். இந்நிலையில் பிரன்ஸ் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார்.

இதனால் தமிழ் நடிகைகள் தற்போது சிவகார்த்திகேயனுக்கு எதிராக கிளம்பியுள்ளனர். அதாவது உக்ரைன் நாட்டிலும் நிறைய படம் எடுத்து வருகிறார்கள். அந்தப் படங்களில் அந்த நாட்டு ஹீரோயின்கள் நடிக்கலாம். இதனால் மற்ற நாடுகளில் அந்த நடிகைகள் நடிக்க தடை விதிக்க வேண்டும்.

ஏனென்றால் நம்ம ஊரு நடிகைகளுக்கு அவர்கள் வாய்ப்பு கொடுத்து உள்ளனரா என தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் ஹீரோயின்கள் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் சினிமாவில் முன்னேற பல கஷ்டங்கள் பட்டுள்ளார்.

அவரே இவ்வாறு தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மற்ற நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைப்பது வேதனை அளிக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர். சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் தமிழ் ஹீரோயின்களை காட்டிலும் பாலிவுட் நடிகைகள் தான் அதிகமாக நடிக்கின்றனர்.