சீரியலுக்கு முழுக்கு போட்ட கண்ணம்மா, சுந்தரி.. தனி அங்கீகாரமே கிடைச்சாச்சு!

டிஆர்பி யில் மட்டுமல்லாமல் சின்னத்திரை ரசிகர்களிடமும் பிரபலமான சீரியலாக இருக்கும் இரண்டு சீரியல்கள் ஆன விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியின் சீரியல் நடிகைகள் தற்போது சினிமாவில் லக் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் சமீபத்தில் கதாநாயகியாக நடித்துக்கொடுத்த டிக் டாக் பிரபலம் வினுஷா தேவி மற்றும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரில்லா செலஸ் இருவரும் இணைந்த கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தில் இவர்கள் இருவரும் மீனவப் பெண்களாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மைக்கேல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை ‘என் மகன் மகிழ்வன்’ (My Son is Gay) என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே காசிமேடு காவல் நிலையத்தின் குறியீட்டு எண் N4, இந்தப்படத்தின் டைட்டிலாக அமைப்பதற்கு காரணம்.

இந்தப் படத்தின் மூலம் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை புரிய வைப்பதால் இந்தப் படம் தணிக்கையில் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் பார்க்கக்கூடிய படங்களுக்கு மட்டுமே U/A சான்றிதழ் வழங்கப்படும்.

எனவே தரமான படத்தைக் கொடுத்த வினுஷா தேவி மற்றும் கேப்ரில்லா செலஸ் இருவருக்கும் இனி சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் சீரியலில் முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் இனி வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்த உள்ளனர்.

இந்த தகவலை அறிந்த விஜய் டிவி சீரியல் ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த ரோஷினி விலகிய பிறகு, அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் ரோஷினி பட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் விலகிய நிலையில், சீரியலில் கிடைத்த வாய்ப்பை வினுஷா தேவி சரியாக பயன்படுத்தி தற்போது பட வாய்ப்பு பெற்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.