சும்மாவே இருக்க மாட்டீங்களா.. நேரலையில் வந்து குமுறிய ஸ்ருதிஹாசன்

சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் பல படங்களை கைவசம் வைத்திருந்தால் பிசியான நடிகராக வலம் வந்தார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அவரது மார்க்கெட் போய்விட்டது. இந்நிலையில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் சலார் படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுருதிஹாசன் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ளார். தற்போது ஸ்ருதிஹாசனின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளது என தகவல் வெளியானது. இவ்வகை நோய் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த நோயை எதிர்கொள்ள கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலம் சரி செய்து வருவதாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இதை அறிந்த சில பேர் தற்போது ஸ்ருதிஹாசனுக்கு உடல்நிலை மோசமாக உள்ளது.

மேலும் இந்த பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாக பல வதந்திகள் இணையத்தில் உலாவி வந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையறிந்த ஸ்ருதிஹாசன் தற்போது வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதில் நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், என்னைக் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுருதிஹாசன் கூறியுள்ளார். இது எல்லோருக்கும் வரக்கூடிய சாதாரண பிரச்சினைதான். நான் இப்போது நலமாக உள்ளேன் என ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வீடியோ மூலம் கூறியுள்ளார்.

சிலர் இது போன்ற தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம் என ஸ்ருதிஹாசன் இணையத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது சுருதிஹாசன் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post சும்மாவே இருக்க மாட்டீங்களா.. நேரலையில் வந்து குமுறிய ஸ்ருதிஹாசன் appeared first on Cinemapettai.