சூரியின் இடத்தை பிடித்த பிரபல காமெடியன்.. வேறு வழி இல்லாமல் மாறிய ரூட்!

நடிகர் சூரி நடித்துக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு இப்போதுதான் அவர் மற்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆனால் இப்போது அவருக்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் வருகிறதாம்.

இதற்கு காரணம் தற்போது அவருடைய இடத்தை பிரபல நடிகர் யோகி பாபு பிடித்துவிட்டது தான். சூரியின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவரின் கைவசம் விடுதலை, விருமன் திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன.

ஆனால் யோகி பாபு அப்படி கிடையாது. அவரின் கைவசம் தற்போது 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றது. முன்னணி கதாநாயகர்கள் அனைவரின் படத்திலும் தற்போது யோகி பாபு தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் சூரியின் நிலைமை தற்போது பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சூரி, வடிவேலு, சந்தானம் இல்லாத குறையை போக்கி வந்தார். அவர்கள் இருவரும் ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு சூரி அவர்களுடைய இடத்தை வெகு சுலபமாக பிடித்து விட்டார். தற்போது அதேபோன்று தான் இவர் விஷயத்திலும் நடந்து இருக்கிறது.

இதனால் சூரி விட்ட இடத்தை பிடிக்க முடியாது என்று நன்றாக புரிந்து கொண்டு விட்டார். அதனால் அவர் தற்போது அவருடைய சொந்த தொழிலில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். சூரிக்கு மதுரை மாவட்டத்தில் அம்மன் என்ற மிகப்பெரிய ஹோட்டல் இருக்கிறது.

நல்ல தரமான உணவுகளை கொடுத்து வருவதால் அந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களும் அதிகமாக வருகின்றார்களாம். இதனால் சூரி தற்போது நிறைய கிளைகள் ஆரம்பித்துள்ளார். அதனால் அவர் இப்போது தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்துவதில் தீவிர கவனம் காட்டி வருகிறாராம்.