ஜாக்கி சான் ரேஞ்சில் சண்ட போட்ட தனுஷ் வீடியோ.. மேலும் ஹாலிவுட் மேடையில் கலக்கல் பேச்சி

ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கிரே மேன் படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகயுள்ளது. அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இந்த படத்தை இயக்கியுள்ளனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் புரோமோஷன் தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்தது. இதனால் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் தற்போது உள்ளார். இந்நிலையில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் தலைசிறந்த கொலையாளியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பிரமோஷனில் ஆடியன்ஸ் கேட்கும் கேள்விக்கு காமெடியாக பதிலளித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என கேள்விக்கு பதில் அளித்த தனுஷ் எனக்கு இந்த படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதே தெரியவில்லை என வேடிக்கையாக பதிலளித்திருந்தார்.

மேலும், இப்படத்தில் நடிக்கும்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டு உள்ளதாகவும், இந்த படத்தில் நடித்தது சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அதாவது ஹாலிவுட் நடிகர்களை அடித்து தனுஷ் தும்சம் செய்கிறார். இந்த மாசான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கண்டிப்பாக தனுஷின் தி கிரே மேன் படம் அவரது திரை வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தில் தனுஷின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.