ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை ரஜினி உடனடியாக அறிவித்தார்.

அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Also read : ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியை இயக்கப்போகும் 3 டைரக்டர்கள்.. படு பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார்

மேலும் இப்படத்தில் ரஜினிக்கு இணையான இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் இருக்கிறதாம். அந்த பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் மற்றும் தமன்னா இருவரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் ரஜினிக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு அவர்களுடைய கேரக்டர் இருக்குமாம்.

படம் வெளிவந்த பிறகு அவர்களுடைய கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த ஜெய் இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Also read : இந்த 4 படத்தின் தழுவல் தான் ஜெயிலர் படம்.. சர்ச்சையில் சிக்கிய நெல்சன்

சமீபத்தில் கூட அவர் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இப்படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று தான் தமன்னாவும் சமீப காலமாக தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் அவர் இந்த படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எந்த ஒரு விஷயத்திலும் சொதப்பி விடக் கூடாது என்பதற்காக நெல்சன் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். அதனால்யே இந்த திரைப்படம் இப்போது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read : போலீஸ் தேடும் குற்றவாளிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. ஜெயிலர் படத்தில் நடிக்கும் நிஜ அக்யூஸ்ட்