டான் படத்தில் சொதப்பிய இரண்டு முக்கிய கேரக்டர்கள்.. முதல் படத்திலேயே ஊதிய சங்கு

சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள டான் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த அளவுக்கு படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையும் என்றும், நல்ல வசூலை வாரிக் கொடுக்கும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். மேலும் படத்தில் அவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனி இருவரும் படத்தை தாங்கிப் பிடித்து உள்ளனர்.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு இதிலும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் சமுத்திரகனி சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதில் சிவகார்த்திகேயன் நண்பராக வரும் வீஜே விஜய்யின் நடிப்பு படத்தில் ஒட்டாதது போன்று தெரிகிறது. ஆனால் மற்றொரு நண்பராக வரும் பால சரவணனின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

மேலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருக்கும் சிவாங்கி இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஒரு பாடகியாக அவர் பிரபலமாக இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே அவரை இன்னும் பிரபலம் ஆக்கியது. அதனால் அவர் முதன் முதலாக சினிமாவில் நடித்து இருக்கும் இந்த டான் திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதற்கு ஏற்றார்போல் சிவாங்கியும் இந்தப் படம் குறித்து ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வந்தார். ஆனால் படத்தில் அவருடைய கேரக்டர் பெரிய அளவில் இல்லை. ஹீரோயினுக்கு பிரண்டாக அங்கே இங்கே வந்து செல்லும் கேரக்டர்தான். இருந்தாலும் முதல் படத்திலேயே பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்து விடாது சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

The post டான் படத்தில் சொதப்பிய இரண்டு முக்கிய கேரக்டர்கள்.. முதல் படத்திலேயே ஊதிய சங்கு appeared first on Cinemapettai.