தனுஷ் பட நடிகைக்கு அடித்த லக்கி பிரைஸ்.. கூடவே ஒட்டிக் கொண்ட விஜய் டிவி புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். தற்போது இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி உள்ள வீட்ல விசேஷம் படத்திலும் புகழ் நடித்திருந்தார். தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு புதிய படத்தில் புகழ் இணைந்துள்ளார். உலகநாதன் சந்திரசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் பால சரவணன் என்ற புதுமுக நடிகர் இப்படத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் கதாநாயகியாக விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வரும் அம்மு அபிராமி நடிக்கயுள்ளார். ஏற்கனவே அம்மு அபிராமி தனுஷின் அசுரன் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் அம்மு அபிராமிக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தற்போது இவருக்கு மீண்டும் பட வாய்ப்பு வர தொடங்கியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே அம்மு அபிராமி உடன்தான் புகழ் அதிகமாக இருப்பார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக உள்ளாடை தயாரிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதை ரேட் மற்றும் கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது.

அதில் கதாநாயகன், அம்மு அபிராமி, புகழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனால் அம்மு அபிராமி மற்றும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் புகழ் அதிக படங்களில் கமிட்டாகி உள்ளதால் இப்போதே சில எபிசோடுகளில் அவர் கலந்து கொள்வதில்லை.